டேனியல் கிரேக் விலகல் - அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்?

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் என்பதை அமேசான் எம்.ஜிம்.எம் ஸ்டூடியோஸ் இந்த வார இறுதியில் அறிவிக்க உள்ளது.
டேனியல் கிரேக் விலகல் - அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்?
Published on

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். கிரைம் திரில்லர் படங்கள் என்பதால், எல்லா வயதினரும் அந்த படங்களை ரசிப்பர். இதுவரை 25 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. தொலைக்காட்சி தொடர்கள், காமிக்ஸ் புத்தகங்கள், கார்ட்டூன்கள் என ஏராளமானவை ஜேம்ஸ் பாண்ட் பெயரில் உலகம் முழுவதும் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்துள்ளன.

அந்த அளவுக்கு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டது. அந்த பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர்களும், பெரும் புகழ் அடைந்து விடுகின்றனர். சீன் கானரி தொடக்க கால படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தார். அவருக்கு பிறகு ரோஜர் மூர், ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்து புகழ் பெற்றார்.

கடைசியாக வெளியான 5 படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தவர் டேனியல் கிரேக். கடைசியாக 2021ல் 'நோ டைம் டூ டை' என்ற படம் வெளியானது. அதன் பிறகு ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் கடந்த 2021-ம் ஆண்டு நடிகர் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் இருந்து விலகினார். எனவே அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் 007 ஆக நடிக்கப்போவது யார் என்பதை ஜேம்ஸ் பாண்ட் படங்களின் பிரான்சாய்ஸ் உரிமையை பெற்ற அமேசான் எம்.ஜி.எம்., ஸ்டூடியோஸ் தேர்வு செய்துள்ளது. இந்த வார இறுதியில் புதிய (26-வது) ஜேம்ஸ் பாண்ட் யார் என்பதை அறிவிக்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com