திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

கடவுள் மீது அதீத நம்பிக்கைக் கொண்டவர் நடிகர் யோகிபாபு.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்
Published on

திருவண்ணாமலை,

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். நடிகர் மட்டுமின்றி கடவுள் மீது அதீத நம்பிக்கைக் கொண்ட யோகிபாபு அடிக்கடி கோவில்களுக்கு சென்று வழிபாடும் செய்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் யோகிபாபு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை வந்தார். ராஜகோபுரம் அருகில் உள்ள கம்பத்திளையனார் சன்னதியில் நடிகர் யோகி பாபு மனம் உருகி முருகரை வழிபட்டார். பின்னர் அண்ணா மலையார் உண்ணாமலை அம்மனை வழிபட்டார். இதனை தொடர்ந்து பைரவர் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

கோவிலில் இருந்து வெளியே வந்தபோது நடிகர் யோகி பாபுவுடன் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com