கையில் பாட்டில்...! நானி உடன் ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்...!

உகாதி திருநாளை முன்னிட்டு தசரா படத்தில் இருந்து தூம் தாம் என்கிற பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்வதற்காக மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நானியும் கீர்த்தி சுரேஷும் கலந்துகொண்டனர்.
கையில் பாட்டில்...! நானி உடன் ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்...!
Published on

மும்பை

ஸ்ரீகாந்த் ஓடலா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தசரா. இதில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மார்ச் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தசரா படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் தற்போது அப்படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் நானி இருவருமே தசரா புரமோஷனில் கலந்துகொண்டு உள்ளனர்.

அந்த வகையில் இன்று உகாதி திருநாளை முன்னிட்டு தசரா படத்தில் இருந்து தூம் தாம் என்கிற பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்வதற்காக மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நானியும் கீர்த்தி சுரேஷும் கலந்துகொண்டனர்.

இதில் நடிகர் ராணாவும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தசரா பட டிரைலரில் நானி சரக்கு பாட்டிலை வாயில் வைத்து ஒரே கல்பாக அடிக்கும் படியான காட்சி இடம்பெற்று இருக்கும். அதைப்போலவே இந்த புரமோஷன் நிகழ்விலும் செய்து காட்டியுள்ளார் நானி.

அப்போது அங்கு பாட்டில் உடன் வந்த கீர்த்தி சுரேஷ், நானிக்கு போட்டியாக அவரது ஸ்டைலிலேயே அந்த பாட்டிலில் உள்ளதை குடித்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் ஷாக் ஆகினர். பின்னர் தான் அந்த பாட்டிலில் மது இல்லை வெறும் குளிர் பானம் தான் இருந்தது என தெரியவந்தது.

இதையடுத்து அங்கு வந்திருந்தவர்களுக்கு அந்த குளிர்பானத்தை வழங்கி உற்சாகப்படுத்தினார் கீர்த்தி சுரேஷ். இந்த விழாவில் தூம் தாம் பாடலுக்கு நானியும் கீர்த்தி சுரேஷும் நடனமும் ஆடினர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com