26 வயது வாலிபருடன் டேட்டிங்... ஒரு நாள் இரவை கழித்த நடிகையின் குதூகல அனுபவம்

அமெரிக்க நடிகரான சீன் பென்னை 2013-ம் ஆண்டு முதல் தெரான், டேட்டிங் செய்ய தொடங்கினார்.
நியூயார்க்,
முன்னாள் மாடல், நடன கலைஞர், பட தயாரிப்பாளர் மற்றும் நடிகை என பன்முக தன்மை கொண்டவர் சார்லிஸ் தெரான். அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நடிகையான தெரானிடம், பிரபல நிருபரான மெகின் கெல்லி என்பவர், டாக் ஷோ எனப்படும் நிகழ்ச்சிக்காக அவரிடம் பேட்டி எடுத்துள்ளார்.
அப்போது, 29 வயது வாலிபர் ஒருவருடன் டேட்டிங் சென்ற அனுபவங்களை கெல்லியுடன் பகிர்ந்து கொண்டார். இது முறையற்றது. அருவருக்கத்தக்கது என கெல்லி அவரை சாடினார்.
அவர் ஒரு பெரிய நட்சத்திர நடிகை. அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். அவர் இன்னும் கற்று தேற வேண்டும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில், தெரானிடம் பாலியல் உறவு பற்றி அறிவுரை தரும்படி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய தெரான், என்னுடைய 40 வயதில் இதற்கான சுதந்திரம் கிடைத்தது என்றே நான் நினைக்கிறேன். என்னுடைய மொத்த வாழ்க்கையில் 3 முறை, முன்பின் தெரியாத ஆண் நண்பர்களிடம் பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளேன்.
சமீபத்தில், 26 வயது வாலிபர். உண்மையில் ஆச்சரியப்படும் வகையில் இருந்தது. இதற்கு முன்பு ஒருபோதும் இல்லாதது போன்று நான் செயல்பட்டேன். மிக சிறப்பாக இருந்தது. ஓகே என தெரான் கூறியுள்ளார்.
நான் பலமுறை டேட்டிங் சென்றதுபோன்று உணர்ந்தேன். என்னுடைய 20 வயதில் இதனை நான் செய்திருக்க வேண்டும். ஆனால், அப்போது எனக்கு திருமணம் நடந்து விட்டது. 2 குழந்தைகளும் வந்து விட்டனர்.
இதற்கு பின்னர், டேட்டிங் செல்வதற்கு, ஒப்பனை செய்து கொள்வதற்கு எல்லாம் நேரம் எங்கே இருக்க போகிறது? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறினார்.
அமெரிக்க நடிகரான சீன் பென்னை 2013-ம் ஆண்டு முதல் தெரான், டேட்டிங் செய்ய தொடங்கினார். ஆனால், அந்த உறவு 2015-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. பாலியல் உறவு பற்றி அறிவுரை வழங்கும்படி கேட்டதற்கு, வாலிபருடனான உறவை பற்றி பொதுவெளியில் தெரான் கூறிய விசயங்களுக்காக, கெல்லி அவரை கடிந்து கொண்டார்.






