

சென்னை
ரஜினிகாந்தின் காலா முதல் நாளில் தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு நல்ல தொடக்கத்தை பெற தவறிவிட்டதாகவே கூறப்படுகிறது. காலா தமிழகத்தில் 650 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் ,அதே நேரத்தில் உலக அளவில் 2,500 திரையரங்குகளிலும் வெளியாகி உள்ளது.
வர்த்தக ஆய்வாளர்களின் ஆரம்ப மதிப்பீடுகள் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி ரூபாயை ஈட்டியுள்ளன என்று காட்டியுள்ளது.
தயாரிப்பாளர் தரப்பில் கூறும் போது முதல் நாள் தமிழ்நாட்டில் ரூ. 17 கோடி,ஆந்திரா தெலுங்கானா ரூ. 7 கோடி,கேரளாவில் ரூ. 3 கோடி,, மற்றும் இந்தியாவில் ரூ 6 கோடி வெளிநாட்டு நாட்டிலிருந்து ரூ17 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இது உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடியாகும்.இந்த மதிப்பிடப்பட்ட வசூல் மற்றும் இறுதி வசூல் மாறுபடும். என ஐபிடைம்ஸ்( ibtimes ) கூறி உள்ளது.
நடிகர் விஜய்யின் மெர்சல் படம் தான் கடைசியாக பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்த படம் என கூறலாம். தற்போது ரஜினிகாந்தின் காலா படத்திற்கும் அதே போலவே வரவேற்பு கிடைத்து வருகிறது.
முதல் நாளில் மட்டும் காலா படம் சென்னை பகுதியில் மட்டும் 1.76 கோடி வசூலித்துள்ளது. இது மெர்சல் வசூலான 1.52 கோடி ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரம்மாண்ட சாதனையை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் ஒருபுறம் காலா திரைப்படத்தின் வசூல் மிக குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்தின் காலா 2-வது நாள் பாக்ஸ் ஆபிஸில் ஒரு நல்ல வேகத்தை தக்க வைத்துக் கொண்டு உள்ளது. இந்த வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸை நல்ல வசூலை கொடுக்கும் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது நாளில் காலா 10.5 கோடி ரூபாய் வசூலித்ததாக வரும் ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் இரண்டு நாள் மொத்த வசூல் ரூ. 25.9 கோடி என கூறப்படுகிறது. சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் டிக்கெட் நன்கு விற்பனையாகி உள்ளது. இந்த இரு பகுதிகளில் இருந்து மட்டும் ரூ. 10 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது. அது போல் கோயம்புத்தூர் வடக்கு மற்றும் தெற்கு ஆற்காடு பகுதிகளில் நன்றாக வசூல் செய்திருக்கிறது.
முதல் நாள் காலா வசூல் 15.4 கோடி ரூபாயில் முடங்கியது. ரஜினிகாந்தின் முந்தைய படமான கபாலியை விட இது மிகக் குறைவானது,கபாலி முதல் நாளில் வசூல் ரூ. 21.5 கோடியாக இருந்தது.
ரஜினிகாந்தின் திரைப்படமான 'காலா' பைரசி மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளாக முழுத் திரைப்படமும் டோரண்ட் இணையதளத்தில் லிக் ஆகி உள்ளது. திரைப்படங்கள் சர்வதேச மையங்களில் முதல் காட்சி வெளியாக சில மணி நேரங்களுக்குப் பிறகு, தமிழ் ரோகர்ஸ் போன்ற இணைய தளங்கள் அந்தப் படத்தை லீக் செய்து இருந்தன. இதுவும் பாக்ஸ் ஆபிஸில் திரைப்படத்தின் வசூலில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என ஐபிடைம்ஸ்
(ibtimes ) கூறி உள்ளது.
இது போல் சமுக வலைதளம் மூலம் ரஜினிகாந்தின் ரசிகர்கள் சிலரும் படத்தில் இருந்து கிளிப்ஸ்களை பகிர்ந்து கொண்டனர். ஆனால் நடவடிக்கைகள் முடிவடையவில்லை. முழு படம் இப்போது ஒரு சில டோரண்ட் இணைய தளங்களில் "இலவச பதிவிறக்கமாக கிடைக்கிறது.