'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023-ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்' உருவாகி உள்ளது.

ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற மே மாதம் 16-ந் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இது குறித்த பதிவை சந்தானம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com