தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு 2-வது பெண் குழந்தை

ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 தீபிகா படுகோன்
Published on

மும்பை,

பாலிவுட் நட்சத்திர தம்பதியான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு 2-வது பெண் குழந்தை பிறந்துள்ளது.

2018-ல் திருமணம்

நடிகை தீபிகா படுகோனும், நடிகர் ரன்வீர் சிங்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2024-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு துவா (Dua) என பெயரிட்டனர்.

இந்த நிலையில், தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு 2-வது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சித்திவிநாயகர் கோவிலில் வழிபாடு

குழந்தை பிறப்பதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை, தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் மும்பையில் உள்ள பிரபல சித்திவிநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தனர்.

மூத்த மகள் துவா பிறப்பதற்கு முன்பாகவும் இந்த தம்பதி சித்திவிநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com