அல்லு அர்ஜுன் - அட்லீ படத்தில் தீபிகா படுகோனே...சமந்தா வாழ்த்து


Deepika Padukone in Allu Arjun - Atlee movie...Samantha wishes her
x

பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகிய தீபிகா படுகோனே தற்போது அட்லீ படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

சென்னை,

நடிகை தீபிகா படுகோனேவிற்கு நடிகை சமந்தா வாழ்த்து கூறியுள்ளார். அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள பிரமாணட் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படத்தில் நடிகை தீபிகா படுகோனே இணைந்திருக்கிறார். இவர் இதற்கு முன்பு அட்லீ இயக்கிய 'ஜவான்' படத்தில் நடித்திருந்தார்.

அப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பிரபாஸின் 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து விலகிய தீபிகா படுகோனே தற்போது அட்லீ படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் இதன் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகி வரும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.


1 More update

Next Story