''தீபிகா படுகோன் மிகவும் கடின உழைப்பாளி'' - நடிகை டயானா பென்டி

தீபிகாவுடன் பணியாற்றியது பற்றி டயானா பென்டி மனம் திறந்து பேசினார்.
மும்பை,
இந்த ஆண்டு வெளியான ''சாவா'' மற்றும் ''ஆசாத்'' படங்களால் ரசிகர்களை ஈர்த்த பாலிவுட் நடிகை டயானா பென்டி, நடிகை தீபிகா படுகோனை பாராட்டி இருக்கிறார்.
கடந்த 2012-ம் ஆண்டு வெளியான காதல்-நகைச்சுவை படமான காக்டெய்ல் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் டயானா பென்டி. இப்படத்தில் அவருடன் தீபிகா படுகோன், சயிப் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், தீபிகாவுடன் பணியாற்றியது பற்றி டயானா பென்டி மனம் திறந்து பேசினார். அவர் கூறுகையில், , "எனது முதல் படத்தில் எனக்கு எதுவும் தெரியாத காலங்களில் தீபிகா மற்றும் சைப் அலி கான் இருவரும் ஆதரவாக இருந்தனர். நான் தீபிகாவுடன் பல காட்சிகளில் நடித்திருக்கிறேன். அவர் மிகவும் கடின உழைப்பாளி, மிகவும் அர்ப்பணிப்புள்ளவர்' என்றார்.
டயானா தற்போது 'டூ யூ வான்ன பார்ட்னர்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் இவருடன், தமன்னா ஜாவேத் ஜாப்ரி, நகுல் மேத்தா, ஸ்வேதா திவாரி மற்றும் நீரஜ் கபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கோலின் டி'குன்ஹா மற்றும் அர்ச்சித் குமார் இயக்கியுள்ளனர். ''டூ யூ வான்ன பார்ட்னர்'' தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.






