ஹாலிவுட் வெப் தொடருக்கு ‘நோ’ சொன்ன தீபிகா படுகோன்?

தற்போது தீபிகா படுகோன் ‘கிங்’ மற்றும் ‘ஏஏ22’ படங்களில் நடித்து வருகிறார்.
ஹாலிவுட் வெப் தொடருக்கு ‘நோ’ சொன்ன தீபிகா படுகோன்?
Published on

மும்பை,

எச்பிஓ நிறுவனத்தின் எம்மி விருது பெற்ற ‘தி வைட் லோடஸ்’-தொடரின் நான்காவது சீசனில் நடிகை தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.

ஆனால், தற்போது அந்த வாய்ப்பை தீபிகா நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ‘தி வைட் லோடஸ்’ தொடரில் நடிக்க விரும்பும் நடிகர்களுக்கு ஆடிஷன் மற்றும் ஸ்கிரீன் டெஸ்ட் கட்டாயம் என்று கூறப்படுகிறது. ஆனால், தீபிகா ஆடிஷனில் பங்கேற்க விருப்பம் காட்டாததால் விலகியதாக தெரிகிறது.

மூன்றாவது சீசனுக்கும் படக்குழு அவரை அணுகியிருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு ‘கல்கி 2898 ஏடி 2’ மற்றும் ‘ஸ்பிரிட்’ போன்ற படங்களிலிருந்து தீபிகா படுகோன் விலகியது குறிபிடத்தக்கது.

தற்போது தீபிகா படுகோன் ‘கிங்’ மற்றும் ‘ஏஏ22’ படங்களில் நடித்து வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com