40 வயதிலும் இளமை ததும்பும் தீபிகா படுகோனே... ரகசியம் என்ன?

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புதிய படத்தில் தீபிகா படுகோனே நடித்துக் கொண்டிருக்கிறார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, தற்போது நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ‘கிங்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புதிய படத்தில் தீபிகா படுகோனே நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் 2028ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 40 வயதிலும் தனது ததும்பும் இளமைக்கும் உடற்கட்டுக் கோப்பிற்குமான ரகசியத்தை தீபிகா படுகோனே பகிர்ந்துள்ளார். தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் கட்டாயமாக உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதே தனது இளமையின் முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தினசரி உணவுகளை ஆறு வேளைகளாக பிரித்து சாப்பிடுவதாகவும், அதுவே தனது உடல் நலத்திற்கும் கட்டுக்கோப்பிற்கும் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். காய்கறிகள், பருப்பு வகைகள், ரொட்டி மற்றும் மீன் ஆகியவை தன்னுடைய விருப்பமான முக்கிய உணவுகள் என்றும் தீபிகா குறிப்பிட்டுள்ளார்.






