தீபிகா படுகோனே கர்ப்பமாக இருந்தாலும் ஆக்சன் குறையாது: ‘ராக்கா’வில் அட்லீயின் தீர்மானம்

நடிகை தீபிகா படுகோனே 2-வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.
தீபிகா படுகோனே கர்ப்பமாக இருந்தாலும் ஆக்சன் குறையாது: ‘ராக்கா’வில் அட்லீயின் தீர்மானம்
Published on

சென்னை,

‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் 'ராக்கா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.

இப்படம் சுமார் 800 கோடி ரூபாய்க்கு அதிகமான பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு இணையாக தீபிகா படுகோனே கதாபாத்திரமும் 'பவர்புல்' ஆக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்தநிலையில் தீபிகா படுகோனே 2-வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதனால் தீபிகா படுகோனே சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் குறைக்கப்படலாம் என்று பேசப்பட்டது. ஆனால் தீபிகா படுகோனே சம்பந்தப்பட்ட காட்சிகளை குறைக்க கூடாது என்பதில் அட்லீ திட்டவட்டமாக இருக்கிறாராம். இதனால் ஆக்ஷன் காட்சிகளில் 'பாடி டபுள்' முறையில், அதாவது 'டூப்' வைத்து சமாளிக்க திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக தீபிகா படுகோனே போல உருவத்தில் ஒற்றுமையாக இருக்கும் 3 பெண்களை தேர்வு செய்துள்ளார்களாம். ஆக்ஷன் காட்சிகள் தவிர இதர காட்சிகளில் தீபிகா படுகோனே வழக்கம்போல நடிப்பார் என்று கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com