நடிகை சைத்ரா ஆச்சாருக்கு எதிராக அவதூறு: மன்னிப்பு கேட்ட இன்ஸ்டா நபர்

நடிகை சைத்ரா ஆச்சாருக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் மகேஷ் ஒசமணி என்பவர் ஆபாச கருத்துகளை பதிவிட்டு இருந்தார்.

நடிகை சைத்ரா ஆச்சாருக்கு எதிராக அவதூறு:  மன்னிப்பு கேட்ட இன்ஸ்டா நபர்
Published on

பெங்களூரு,

கன்னட திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் சைத்ரா ஆச்சார். கன்னடத்தில் மஹிரா படத்தில் அவர் அறிமுகம் ஆகி இருந்தார். தமிழில் 3 பி.எச்.கே. படத்தில் சைத்ரா ஆச்சார் நடித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை சைத்ரா ஆச்சாருக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் மகேஷ் ஒசமணி என்பவர் ஆபாச கருத்துகளை பதிவிட்டு இருந்தார். மகேஷ் ஒசமணி போலீஸ் சீருடை அணிந்து கொண்டு இன்ஸ்டாகிராம் முகப்பில் தனது புகைப்படத்தை வைத்திருந்தார். இதுபற்றி பெங்களூரு போலீஸ் இன்ஸ்டாகிராமில் சைத்ரா ஆச்சார் டேக் செய்துள்ளார்.

இதனால் பதறிப்போன அந்த நபர், இன்ஸ்டாகிராமில் தான் வெளியிட்ட பதிவுகளை அழித்துள்ளார். அத்துடன் சைத்ரா ஆச்சாரிடம் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com