வலைத்தளத்தில் அவதூறு: நடிகை பாவனா கோபம்

வலைத்தளங்களில் தனக்கு எதிராக அவதூறு பரவுவதால் நடிகை பாவனா கோபம் அடைந்துள்ளார்.
வலைத்தளத்தில் அவதூறு: நடிகை பாவனா கோபம்
Published on

தமிழ், மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பாவனா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்து' என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் வலைத்தளங்களில் தனக்கு எதிராக அவதூறு பரவுவதால் கோபம் அடைந்துள்ளார். இதுகுறித்து பாவனா அளித்துள்ள பேட்டியில், ''மலையாள படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லாமல் இருந்தது. ஆனாலும் நண்பர்கள் மீண்டும் நடிக்க வைத்து விட்டார்கள். இணைய தளங்களில் எனக்கு எதிராக அவதூறுகள் வருகின்றன. வலைத்தளம் மூலம் மற்றவர்களை மிரட்டுவது, களங்கம் ஏற்படுத்துவது சிலரின் வேலையாகிவிட்டது.

பணம் கொடுத்து ஆட்களை பணியமர்த்தியும் இதை செய்ய வைக்கிறார்கள். எனது கதாபாத்திரங்கள் வாயிலாக என்னை அறிந்தவர்களும் இதனை செய்தனர். என் முதுகுக்கு பின்னால் பேசியவர்களை நான் மறக்க மாட்டேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com