நடிகர் நெப்போலியன் மகன் பற்றிய அவதூறு வீடியோக்கள் அகற்றம்


Defamatory videos about actor Napoleons son removed
x

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ் - மருமகள் அக்சயா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது.

நெல்லை,

நடிகர் நெப்போலியன் மகன் தொடர்பான அவதூறு வீடியோக்களை அகற்றும் பணியை நெல்லை மாவட்ட காவல்துறைத் தொடங்கி இருக்கிறது. அண்மையில் திருமணம் முடித்த நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ் - மருமகள் அக்சயா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது. இதனையடுத்து, நெப்போலியன் தரப்பில் நெல்லை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தனுஷ் மற்றும் அக்சயா இருவரும் நல்ல உடல் நலத்துடன் சேர்ந்து வாழ்ந்து வரும்நிலையில், அவர்கள் குறித்து இணையத்தில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவதூறு பரப்பும் வகையில் யூடியூப்பில் உள்ள வீடியோக்களை நெல்லை மாவட்ட காவல்துறை அகற்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், வீடியோ பதிவேற்றிய யூடியூப் பக்கத்தின் உரிமையாளர்கள் குறித்த தகவல்களை காவலர்கள் திரட்டி வருகின்றனர்.

1 More update

Next Story