அருள்நிதி நடித்துள்ள 'தேஜாவு' படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகர் அருள்நிதி நடித்துள்ள 'தேஜாவு' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
அருள்நிதி நடித்துள்ள 'தேஜாவு' படத்தின் டிரைலர் வெளியானது..!
Published on

சென்னை,

அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மதுபாலா, அச்சுத குமார், காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிஸ்டரி திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் அருள்நிதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் தேஜாவு திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகிற ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தேஜாவு திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் இந்த டிரைலரை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com