ஸ்ரீலீலாவின் “உஸ்தாத் பகத் சிங்” - முதல் பாடல் வெளியீடு

இப்படத்தில் ராஷி கன்னா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
சென்னை,
பவன் கல்யாணின் “உஸ்தாத் பகத் சிங்” படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது. 2012 ஆம் ஆண்டு வெளியான “கப்பர் சிங்” படத்திற்குப் பிறகு பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இரண்டாவது படம் இது.
இப்படத்தில் ராஷி கன்னா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்திலிருந்து முதல் பாடல் 'தேக்லெங்கே சாலா' வெளியாகி இருக்கிறது.
இப்படத்தில் பவன் கல்யாண் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் கோடை விடுமுறை காலத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.
Related Tags :
Next Story






