தாமதமாகும் கமலின் ‘இந்தியன்-2’ ?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்து 1996-ல் வெளியான இந்தியன் படம் வெற்றி பெற்றது.
தாமதமாகும் கமலின் ‘இந்தியன்-2’ ?
Published on

வயதானவராக வந்து வர்ம அடி கொடுத்து ஊழல் அதிகாரிகளை வீழ்த்திய கமலின் வயதான கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. எனவே இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டார். திரைக்கதையை 2017-ல் எழுதி முடித்தார். பிக்பாஸ் மேடையில் கமல்ஹாசனும் ஷங்கரும் சந்தித்து இந்தியன்-2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். அதன்பிறகு கமல்ஹாசன் தனி கட்சி தொடங்கி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதால் பட வேலைகளில் தேக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பை ஷங்கர் தொடங்கிய நிலையில் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியளிக்கவில்லை என்று கூறப்பட்டது.

இதனால் படப்பிடிப்பு நின்றுபோனது. பின்னர் வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து தோற்றத்தை மாற்றி படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினர். கமல்ஹாசன் பல மணிநேரம் மேக்கப் போட்டு நடித்து வந்தார். இந்த நிலையில் கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை நடந்ததால் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் படப்பிடிப்பு முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்றும் கமல்ஹாசன் இதில் பங்கேற்று நடிப்பார் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com