

ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த பிப்ரவரி மாதமே அறிவிப்பு வெளியானது. மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தாமதமாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல இருப்பதாலும், படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் முடியாத காரணத்தாலும், படப்பிடிப்பு ஜூலை மாதத்துக்கு பிறகே தொடங்கும் என்று இயக்குனர் நெல்சன் தெரிவித்து உள்ளார்.
இது ரஜினிக்கு 169-வது படம். அதிரடி குடும்ப கதையம்சம் உள்ள படமாக தயாராவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் ஆகியோர் ரஜினியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
ரஜினிக்கு தங்கையாக பிரியங்கா மோகன் நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினி ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாராய் பெயர் அடிபடுகிறது. ஐஸ்வர்யாராய் ஏற்கனவே எந்திரன் படத்தில் ரஜினியுடன் நடித்து இருந்தார்.