டெல்லி கணேஷ் நடித்துள்ள "மாயக்கூத்து" படத்தின் அப்டேட்

'மாயக்கூத்து' படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி கணேஷ் நடித்துள்ள "மாயக்கூத்து" படத்தின் அப்டேட்
Published on

அறிமுக இயக்குநர் ஏ ஆர் ராகவேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' 'மாயக்கூத்து' திரைப்படத்தில் மறைந்த நடிகர் டெல்லி கணேஷ், மு. ராமசாமி , சாய் தீனா , பிரகதீஸ்வரன், நாகராஜன், முருகன், ஐஸ்வர்யா, காயத்ரி, ரேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராகுல் மூவி மேக்கர்ஸ் மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அஞ்சனா ராஜகோபாலன் இசையமைத்துள்ளார். சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணர்வைச் சுட்டிக்காட்டும் இந்தப் படம், கற்பனை கலந்த திரில்லர் வடிவில் உருவாகியுள்ளது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' படைப்பாளிகளின் சமூக உணர்வை சுட்டிக்காட்டும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களுக்காக திரில்லராகவும் உருவாகி இருக்கிறது. '' என்றார். இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com