அபிஷேக் பச்சனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அபிஷேக் பச்சன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
அபிஷேக் பச்சன் தொடர்ந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. வணிக லாபத்திற்காக அபிஷேக் பச்சனின் பெயர், ஏஐ புகைப்படங்கள் மற்றும் குரலை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
தனது புகைப்படம் உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று அபிஷேக் பச்சன் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதேபோல், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி நடிகை ஐஸ்வர்யா ராய் தொடந்த வழக்கிலும் இதே தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






