‛என் இனிய பொன் நிலாவே' பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு கிடையாது - டெல்லி உயர்நீதிமன்றம்

‛என் இனிய பொன் நிலாவே’ பாடல் காப்புரிமை சரிகம நிறுவனத்திடம் உள்ளதால், ரீமேக் செய்யப்பட்ட பாடலை வெளியிட தடை விதிக்கப்படுகிறது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
‛என் இனிய பொன் நிலாவே' பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு கிடையாது - டெல்லி உயர்நீதிமன்றம்
Published on

டெல்லி,

தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் மூடுபனி. இந்த திரைப்படத்தில் 'என் இனிய பென் நிலாவே' என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த படத்துக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா.

என் இனிய பென் நிலாவே' என்ற பாடல் தற்பேது வெளியாக உள்ள அகத்தியா' என்ற திரைப்படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ளது. இந்த திரைப்படத்துக்கு இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

'அகத்தியா' திரைப்படத்தின் டீசரில் என் இனிய பென் நிலாவே' என்ற மூடுபனி' திரைப்படத்தின் பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சரிகம நிறுவனம் சார்பில் வழக்கு தெடரப்பட்டது. மூடுபனி' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களின் சவுண்ட் ரெக்கார்டிங் மற்றும் மியூசிக்கல் வெர்க்ஸ் ஆகியவற்றின் காப்புரிமை தங்களிடம் தான் உள்ளது என சரிகம நிறுவனம் கூறியுள்ளது. 

இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பேது என் இனிய பொன் நிலாவே பாடலை' உபயோகப்படுத்த இளையராஜாவிடம் அனுமதி பெற்றதாக அகத்தியா' திரைப்படத்தின் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சரிகம நிறுவனம், என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை, சரிகம நிறுவனம் வைத்துள்ளது. இதனை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது' என்று அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தது. அதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், 'என் இனிய பென் நிலாவே' பாடல் காப்புரிமை சரிகம நிறுவனத்திடம் உள்ளது. இதனால் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா அதை 3ம் நபருக்கு வழங்க அனுமதி அளிக்க முடியாது. இதனால் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவின் ரீமேக் செய்யப்பட்ட அகத்தியா' படத்தின் ரீமேக் பாடலை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட தடை விதிக்கப்படுகிறது' என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com