பாட்டி வேடத்தில் நடிக்க மறுத்த நடிகைகள் டைரக்டர் சொன்ன ருசிகர தகவல்

பாட்டி வேடத்தில் நடிக்க மறுத்த நடிகைகள் டைரக்டர் சொன்ன ருசிகர தகவல்.
பாட்டி வேடத்தில் நடிக்க மறுத்த நடிகைகள் டைரக்டர் சொன்ன ருசிகர தகவல்
Published on

ஆதம்பாவா தயாரிப்பில், இளமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ஆன்டி இண்டியன். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நடந்தது. அதில் டைரக்டர் இளமாறன், தயாரிப்பாளர் ஆதம்பாவா, டைரக்டர் வேலுபிரபாகரன், நடிகர் ஆடுகளம் நரேன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். விழாவில் டைரக்டர் இளமாறன் பேசியதாவது:-

இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வேலுபிரபாகரனை அழைத்தபோது, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்க 65 வயது நடிகை ஒருவர் தேவைப்பட்டார். பாட்டி வேடத்தில் நடிக்க பல நடிகைகள் மறுத்து விட்டார்கள்.

அப்போதுதான் பல வருடங்களாக படங்களில் நடனம் ஆடிவந்த விஜயா மாமி பற்றி தெரியவந்தது. அவர் அந்த வேடத்துக்கு பொருத்தமாக இருந்தார். அவரை நடிக்க வைத்தோம். படத்துக்கு முக்கிய தூண் போன்ற கதாபாத்திரத்தில், ஆடுகளம் நரேன் நடித்துள்ளார்.

இப்போதெல்லாம் வருடத்தில் 100 படங்கள் வெளியானால், 10 படங்கள்தான் நல்ல படங்களாக இருக்கின்றன. இந்த கொரோனா காலகட்டத்தில், சுமார் 200 படங்கள் தேங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் இனிதான் திரைக்கு வர உள்ளன.

இவ்வாறு டைரக்டர் இளமாறன் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com