பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து 160 பெட்டிகளில் பொருட்கள் இளையராஜாவிடம் ஒப்படைப்பு

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா 35 ஆண்டுகளாக ரிக்கார்டிங் தியேட்டர் வைத்து இசையமைத்து வந்தார். அவருக்கு அங்கு 5 அறைகள் இருந்தன.
இளையராஜா
இளையராஜா
Published on

இந்த நிலையில் இளையராஜாவை அறையில் இருந்து காலி செய்யும்படி பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் வலியுறுத்தியது. இதனால் ஸ்டூடியோ நிர்வாகம் தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாக இளையராஜா போலீசில் புகார் செய்தார். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டு ரிக்கார்டிங் தியேட்டரில் இளையராஜா நேற்று முன்தினம் ஒரு நாள் தியானம் செய்யுவும் அவருக்கு சொந்தமான பொருட்களை எடுத்து செல்லவும் ஸ்டூடியோ நிர்வாகம் அனுமதி வழங்கியது. ஆனால் அவர் வரவில்லை. ஸ்டூடியோவில் இளையராஜா பயன்படுத்திய அறை தகர்க்கப்பட்டு இருப்பதாகவும் பொருட்களை வேறு அறையில் அள்ளிப்போட்டுள்ளனர் என்றும், இதனால் மன உளைச்சலில் இளையராஜா ஸ்டூடியோவுக்கு வரவில்லை என்றும் அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.

கோர்ட்டு நியமித்த வழக்கறிஞர் ஆணையர் லட்சுமி நாராயணன் தரப்பில் கூறும்போது, ஸ்டூடியோவில் இருந்த இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்கள் காலை முதல் இரவு வரை கணக்கெடுக்கப்பட்டு 160 அட்டை பெட்டிகளில் வைத்து இளையராஜா பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் அறையில் இருந்த ரூ.55 ஆயிரத்து 520 ரொக்கம், விருதுகள், காசோலைகள், 3 பீரோ ஆகியவையும் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்றனர். இந்த பொருட்கள் லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com