

சென்னை,
இயக்குநர் அமீர், இயக்குனர் வெற்றிமாறன், இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சை பகுதிகளுக்கு சென்று நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினர். அதனை தொடர்ந்து,
தஞ்சையில் இயக்குநர் பாரதிராஜா செய்தியார்களிடம் கூறியதாவது:
புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்ய வேண்டும்.
தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் கணக்கெடுக்கும் பணி விரைவாக முடிந்திருக்கும். மின்வாரிய ஊழியர்களுடன் ராணுவத்தினரையும் மின் சீரமைப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்டா விவசாயிகளின் வங்கிக் கடனை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் - இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தார்.
தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்தி இருந்தால், புயல் சேதங்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவாக முடிந்திருக்கும் என்று இயக்குநர் அமீர் தெரிவித்தார்.