ஏரி ஆபத்தை தடுக்க கோரும் விஜயகுமார்

நடிகர் விஜயகுமார் முதல்-அமைச்சருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.
ஏரி ஆபத்தை தடுக்க கோரும் விஜயகுமார்
Published on

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈக்காட்டுதாங்கல் கலைமகள் நகர் பகுதியில் நான் பல வருடங்களாக குடியிருந்து வருகிறேன். கடந்த 2015 டிசம்பரில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட போது எங்களது பகுதியில் இருந்து அடையாறுவரை பல ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. உயிர் சேதமும் ஏற்பட்டது. இந்த ஆண்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 21 அடியை தாண்டி உயர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் 2015-ம் ஆண்டை போல பெரிய பாதிப்பு உருவாகும். எனவே முன்னேற்பாடாக ஏரியில் உள்ள தண்ணீரை அளவுடன் திறந்து விட உத்தரவு பிறப்பித்தால் கரையோரம் இருப்பவர்களுக்கு உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படாமல் தடுக்க இயலும். கரையோரம் வசிக்கும் மக்களை காப்பாற்றுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com