'டிமான்ட்டி காலனி 3'...நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்

'டிமான்ட்டி காலனி 3 ' படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
DemonteColony3 First Look Drops Tomorrow at 11:11 AM
Published on

சென்னை,

'டிமான்ட்டி காலனி 3 ' படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது.

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து 'டிமான்ட்டி காலனி ' படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'டிமான்ட்டி காலனி 2' படத்தில் அருள்நிதி , பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

தற்போது இதன் 3-ம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு புது வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com