'தேசிங்கு ராஜா 2'- வெளியாகும் தேதி அறிவிப்பு


Desingu Raja 2 - Release date announced
x
தினத்தந்தி 10 May 2025 2:38 PM IST (Updated: 21 Jun 2025 8:07 PM IST)
t-max-icont-min-icon

இந்த படத்தில் விமல் தவிர குக் வித் கோமாளி புகழ், ரவி மரியா, ஹர்ஷிதா போன்றோர் நடிக்கின்றனர்.

சென்னை,

'பசங்க' படத்தின் மூலம் அறிமுகமான விமல், எழில் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு 'தேசிங்குராஜா' என்ற படத்தில் நடித்திருந்தார். நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

'தேசிங்கு ராஜா 2' முதல் பாகத்தில் இருந்து வித்தியாசமான கதைக்களத்திலும் முதல் பாகத்தைபோல் காமெடி கலந்த கதைக்களத்திலும் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விமல் தவிர குக் வித் கோமாளி புகழ், ரவி மரியா, ஹர்ஷிதா போன்றோர் நடிக்கின்றனர்.

இன்பினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். இந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜூலை 11ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

1 More update

Next Story