“அண்ணாமலை” படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை - சிவகார்த்திகேயன்

முகம் தெரியாத ஒருவர் போடுகின்ற நெகட்டிவ் கமென்ட் என்னை பாதிக்காது என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
“அண்ணாமலை” படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை - சிவகார்த்திகேயன்
Published on: 

ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாமலை’ படத்தை ரீமேக் செய்ய விருப்பம் இருப்பதாக சிவகார்த்திகேயன் பேசியது தற்போது கவனம் பெற்றுள்ளது.

சென்னையில் நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருக்கிறார்.

நெகட்டிவ் கமென்ட் என்னை பாதிக்காது

நிகழ்ச்சியில் நெகட்டிவ் கமென்ட்ஸ் குறித்து பதிலளித்த சிவகார்த்திகேயன், “சோஷியல் மீடியாவில் நெகட்டிவ் கமென்ட் பார்ப்பது, படிப்பது இல்லை. என் சோஷியல் மீடியா பணிகளை என் டீம் பார்க்கிறது. இப்போது ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அடுத்து 2 பட ஸ்கிரிப்ட் வொர்க் நடந்துக்கொண்டு இருக்கிறது. தவிர, என் தயாரிப்பில் 3 படங்கள் உருவாகிறது. ஆக தற்போது 7 கதைகள் மனதிற்குள் இருக்கிறது.

நம்மை நம்பி காசு போடுகின்ற தயாரிப்பாளருக்கு வேலை பார்க்க வேண்டும். அவ்வப்போது ரசிகர்களை சந்திக்க வேண்டும். இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கும்போது, முகம் தெரியாத ஒருவர் போடுகின்ற நெகட்டிவ் கமென்ட் என்னை பாதிக்காது” என்றிருக்கிறார்.

அண்ணாமலை ரீமேக்கில் நடிக்க ஆசை

சிவகார்த்திகேயனிடம் எந்த படத்தை ரீமேக் செய்து நடித்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறீர்கள் என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பொதுவாகவே எனக்கு மற்ற நடிகர்களின் படங்களை ரீமேக் செய்து நடிப்பதில் விருப்பமில்லை. ஒரு வேளை எந்த படத்தை ரீமேக் செய்து நடித்தால் எனக்கு செட் ஆகும் என்று யோசித்தால், தலைவரின் ‘அண்ணாமலை’ படத்தை ரீமேக் செய்து நடிக்க விரும்புகிறேன்” என்று பேசியிருக்கிறார். அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள “அசோக், இந்த நாளை உன் காலண்டரில் குறித்து வைத்துக்கொள்” என்ற வசனம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1992-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் ‘அண்ணாமலை’ . இந்த படத்தினை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் குஷ்பு, மனோரமா, ஜனகராஜ், ராதாரவி, சரத்பாபு எனப் பலரும் நடித்துள்ளனர்.

ரஜினி மக்கள் தொடர்பாளர் எதிர்ப்பு

இதனிடையே சிவகார்த்திகேயனின் ‘அண்ணாமலை’ ரீமேக் பேச்சுக்கு ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே. அகமத் சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘அண்ணாமலை’ போன்ற கல்ட் கிளாசிக் படங்களை ரீமேக் செய்து அதன் தன்மையை கெடுக்கக் கூடாது என்றும், இதுபோன்ற படங்களை பார்த்து ரசிப்பதுடன் அவற்றை பாதுகாப்பதே சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com