எதிர்ப்புகளை மீறி ஆதிபுருஷ் படம் ரூ.400 கோடி வசூல்

ஆதிபுரூஷ் படம் வெளியாகும் முன்பே பல விமர்சனங்களுக்கு உள்ளானது .
எதிர்ப்புகளை மீறி ஆதிபுருஷ் படம் ரூ.400 கோடி வசூல்
Published on

ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள ஆதிபுருஷ் படம் வெளியான நாளில் இருந்தே எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. ராமர் தோற்றத்தில் வரும் பிரபாஸ் மீசை வைத்து நடித்து இருந்ததை விமர்சித்தனர். தலையில் கிரீடம் வைத்து ராஜாவைப்போல் சித்தரித்து அவமதித்து இருப்பதாகவும் கண்டித்தனர்.

சீதையை இந்தியாவின் மகள் என்று குறிப்பிட்டு வசனம் வைத்து இருப்பதற்கு நேபாளத்தில் எதிர்ப்பு கிளம்பியதுடன் அந்த நாட்டில் ஒட்டுமொத்த இந்தி படங்களையும் திரையிட தடை விதித்து அங்குள்ள நகர மேயர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர். ராம பக்தரான அனுமரை பறவையைப்போல் காட்டி இருப்பதாகவும் கண்டன குரல் கிளம்பி உள்ளது.

ஆனாலும் எதிர்ப்புகளை மீறி உலகம் முழுவதும் ஆதிபுருஷ் படம் இதுவரை ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் ராவணனாக சயீப் அலிகான், சீதை வேடத்தில் கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com