'தேவரா' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

‘தேவரா’ திரைப்படத்தின் ‘பத்தவைக்கும்’ எனும் இரண்டாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
'தேவரா' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
Published on

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் இவர்களுடன் இணைந்து பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ரத்னவேலு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி 'தேவரா பாகம்-1' படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் 'பத்தவைக்கும்' எனும் இரண்டாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் இந்த பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். தீப்தி சுரேஷ் பாடியுள்ளார்.

View this post on Instagram

'தேவரா பாகம்-1' திரைப்படம் வருகிற செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com