இன்று மாலை வருகிறது 'தேவரா' டிரெய்லர்

தேவரா படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
'Devara' Trailer Coming Tonight
Published on

சென்னை,

நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். இப்படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில், இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தநிலையில், இன்று மாலை 5.04 மணிக்கு 'தேவரா' டிரெய்லர் வருகிறது என்று படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு நேரத்தை அறிவித்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com