தேவயானி பிறந்தநாள்: சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த "3 பிஎச்கே" படக்குழு

சரத் குமார், தேவயானி, சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 பிஎச்கே’ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது
தேவயானி பிறந்தநாள்: சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த "3 பிஎச்கே" படக்குழு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், 'மிஸ் யூ' படத்தை தொடர்ந்து '3 பிஎச்கே' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது சித்தார்த்தின் 40-வது படமாகும். இந்த படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கி உள்ளாறார்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் 3 பிஎச்கே வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், தேவயானி பிறந்தநாளையொட்டி '3 பிஎச்கே' படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com