இயக்குனர் ஷங்கரின் கனவு படத்தில் நாயகனாக தனுஷ்?

ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள வேள்பாரி படத்தின் நாயகனாக தனுஷ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஷங்கரின் கனவு படத்தில் நாயகனாக தனுஷ்?
Published on

தமிழ் திரையுலகின், பிரம்மாண்ட இயக்குனர்களுள் ஒருவராக இருப்பவர், ஷங்கர். இவரது கடைசி படைப்புகளான 'இந்தியன்-2', 'கேம் சேஞ்சர்' படங்கள் தோல்வியை சந்தித்தன. 'இந்தியன்-3' படம் வருமா, வராதா? என்றும் தெரியாத நிலையில், தனது கனவு படத்தை ஷங்கர் கையில் எடுக்கிறார்.

அதன்படி 'வேள்பாரி' நாவலை படமாக்கும் முயற்சிகளில் இனி முழுமூச்சாக இறங்கப் போகிறாராம். பெரும் பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதாவது, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள வேள்பாரி படத்தின் நாயகனாக தனுஷ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இந்த படத்தில் நாயகனாக நடிக்க சூர்யா, விக்ரம், ரன்வீர் சிங் போன்ற நடிகர்களின் பெயர் வேள்பாரி படத்தின் ஹீரோ பட்டியலில் அடிபட்டு வந்தன. இந்த நிலையில், இந்த படத்தில் நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டதாக வெளியான தகவல் கோலிவுட் வட்டாரங்களில் வைரலாகிறது.

'வேள்பாரி படத்தின் மூலமாக பழைய பன்னீர்செல்வமாக ஷங்கர் மீண்டும் திரும்புவார்' என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com