இயக்குனர் விக்னேஷ் ராஜா கேள்விக்கு தனுஷ் சுவாரஸ்ய பதில்

இயக்குனர் விக்னேஷ் ராஜா, படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் ராஜா கேள்விக்கு தனுஷ் சுவாரஸ்ய பதில்
Published on

சென்னை,

தனுஷ் நடிப்பில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கர’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘போர் தொழில்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற விக்னேஷ் ராஜா, இந்த படத்தை 1990-களில் ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், கிராமத்து பின்னணியில் ஆக்சன் பாணியில் உருவாகி, வருகிற 30-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் விக்னேஷ் ராஜா, படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், “தனுஷ் சாரிடம் உங்களுக்கு மிகவும் சவாலான வேடம் எது என்று கேட்டேன். அதற்கு அவர் ‘மாரி’ தான் எனக்கு மிகவும் சவாலான வேடம் என்று கூறினார்,” என்றார்.

மேலும், “குழந்தைகளின் பலூனை சிகரெட்டால் வெடிக்கச் செய்யும் அளவுக்கு ஒரு மோசமான ரௌடி கதாபாத்திரம். ஆனாலும், அந்த கேரக்டர் ரசிகர்களால் நேசிக்கப்பட வேண்டும். அது கத்தி மேல் நடப்பதற்கு சமமான சவால். அந்த வேடத்திற்கு நிறைய முயற்சி எடுத்தேன் என்று தனுஷ் கூறினார்,” என்றும் விக்னேஷ் ராஜா தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com