ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ்

தனுஷ், ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.
ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ்
Published on

தனுஷ், தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இதில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள். ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் கட்டும் தனது புதிய வீட்டுக்கு பூமி பூஜை போட்டு விட்டு ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக தனுஷ் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளில் பங்கேற்று வந்தார். தற்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து தனுஷ் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக 3 மாதங்கள் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். படத்தில் ஒரு கொலை கும்பலின் தலைவனாக தனுஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com