தனுஷ் ஒரு பல்கலைக்கழகம்- நடிகை மிருணாள் தாக்கூர்

நடிகை மிருணாள் தாக்கூர் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்.
தனுஷ் ஒரு பல்கலைக்கழகம்- நடிகை மிருணாள் தாக்கூர்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் 2004 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு தற்போது இளம் வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2024ஆம் ஆண்டு தனுஷும் ஐஸ்வர்யாவும் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக அறிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக தனுஷும் நடிகை மிருணாள் தாகூரும் காதலித்து வருவதாக செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. சில நிகழ்ச்சிகளில் அவர்கள் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டனர். ஒரு பேட்டியில் மிருணாள் தாகூர், தனுஷ் என்னுடைய சிறந்த நண்பர் என்றும் தெரிவித்திருந்தார். பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.

தனுஷுடன் நடிக்க மிருணாள் தாக்கூர் விருப்பம் தெரிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. பாலிவுட்டில் நடித்துவரும் தனுஷ் சில நிகழ்ச்சிகளில் மிருணாள் தாக்குரை சந்தித்தது ரசிகர்களிடையே பேசுபொருளானது.

இந்நிலையில், தனது ’தோ திவானே சேஹர் மெயின்’ என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றி பங்கேற்ற மிருணாள் தாக்கூர் “ ராயன், மாரி, ராஞ்சனா, கேப்டன் மில்லர், அசுரன் படங்களைப் பார்த்தபிறகு நான் தனுஷின் மிக மிகப் பெரிய ரசிகையாக மாறினேன். அசுரன் படத்தினை பலமுறை பார்க்க முடியும். அவர் ஒரு பல்கலைக்கழகம். அவர் ஒரு பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், நடனமாடுபவர், நடிகர், இயக்குநர் ஆகவும் இருக்கிறார்.

தனுஷ் சார் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். அவரிடம் எனது ‘சன் ஆப் சர்தார் 2’ படத்தின் திரையிடலுக்கு வர முடியுமா எனக் கேட்டேன். அவர் வருவாரென நான் நினைக்கவில்லை. அவர் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. நிஜமாகவே அவரிடன் ஒருநாள் நடிக்க வேண்டுமென மிகவும் விரும்புகிறேன் ” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com