கன்னட மொழியில் தனுஷ் படம்

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை கன்னட மொழியிலும் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கன்னட மொழியில் தனுஷ் படம்
Published on

சென்னை,

தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தனுஷ் தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தை கன்னட மொழியிலும் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே கர்நாடகாவில் நேரடி தமிழ் படமாக இல்லாமல் கன்னட மொழியில் ரிலீஸ் செய்தால் சிவராஜ்குமார் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் அதிக வசூல் பார்க்கலாம் என்றும் அங்குள்ள விநியோகஸ்தர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர்.

சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவருக்காகவே கர்நாடகாவில் ஜெயிலர் படத்தை ரசிகர்கள் தியேட்டர்களில் சிவராஜ்குமார் கட்அவுட் வைத்து கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர். அதேமாதிரி கேப்டன் மில்லர் படத்தையும் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் கன்னட மொழியிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் டைரக்டு செய்துள்ளார். பிரியங்கா, சந்தீப் கிஷன், நிவேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com