தனுஷ் படத்தின் புதிய அப்டேட்

சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்
தனுஷ் படத்தின் புதிய அப்டேட்
Published on

சென்னை,

நடிகர் தனுஷின் 50-வது படமான ராயன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ராயன் படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ரஷ்மிகா, நாகர்ஜுனா என பலர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.குபேரா படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வந்த நிலையில், மும்பையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் குபேரா திரைப்படம்  வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com