தனுஷ் நிறுவனத்திற்கு எதிராக நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
தனுஷ் நிறுவனத்திற்கு எதிராக நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
Published on

சென்னை,

நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்ற ஆவணப்படம் கடந்த நவம்பர் மாதம் நெட்பிளிக்ஸில் வெளியானது. இதற்கு முன்பு வெளியான அந்த ஆவணப்படத்தின் டிரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது.

அந்த காட்சியை உரிய அனுமதியின்றி அதில் பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர் பார்ஸ் நிறுவனம் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

கடந்த 22-ம் தேதி இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வொண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க வேண்டும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வொண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க மறுப்பு தெரிவித்த கோர்ட்டு நெட்பிளிக்சின் மனுவை தள்ளுபடி செய்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com