''குபேரா'' விழாவில் ''டூரிஸ்ட் பேமிலி'' படத்தை மேற்கோள் காட்டிய தனுஷ்


Dhanush quotes Tourist Family at Kubera festival
x

''குபேரா'' படத்தின் வெற்றி விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

சென்னை,

தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் ''குபேரா'' படத்தின் வெற்றி விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் தனுஷ், ''டூரிஸ்ட் பேமிலி'' படத்தை மேற்கோள் காட்டி பேசினார். அவர் கூறுகையில்,

"இன்று ஆக்சன், பாம், பிளட், பெரிய படங்கள் மட்டுமே திரையரங்குகளில் ஓடும் என்ற கட்டுக்கதை உள்ளது. ஆனால் ''குபேரா'' உணர்ச்சிப்பூர்வமான படமும் ஓடும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

இதேபோல் தமிழில் சமீபத்தில் வெளியான ''டூரிஸ்ட் பேமிலி'' படமும் மக்களை திரையரங்குகளுக்கு இழுத்திருந்தது. மக்கள் தற்போது இப்படி பட்ட படங்களை பார்க்க தயாராகிவிட்டார்கள்" என்றார்

1 More update

Next Story