செல்வராகவனின் அடுத்த படம்.. பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் தனுஷ்

செல்வராகவன், தனது அடுத்த படத்திற்காக டென்னிஸ் மஞ்சுநாத்துடன் கைகோர்த்துள்ளார்.
செல்வராகவனின் அடுத்த படம்.. பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் தனுஷ்
Published on

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார். படம் இயக்குவது மட்டுமில்லாமல் நடித்தும் வருகிறார் செல்வராகவன். 'பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல்' , 'டிடி நெக்ஸ்ட் லெவல்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது அடுத்த படத்திற்காக டென்னிஸ் மஞ்சுநாத்துடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தில் குஷி ரவி, கவுசல்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

இந்த நிலையில், இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனரும், நடிகருமான தனுஷ் வெளியிட உள்ளார். இந்த போஸ்டர் நாளை காலை 11 மணியளவில் வெளியாக உள்ளதாக செல்வராகவன் அறிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com