இசை வெளியீட்டு விழாவில் விஜயகாந்த் குறித்து மனமுருகி பாடிய தனுஷ்... வீடியோ வைரல்..!

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அண்மையில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த்துக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இசை வெளியீட்டு விழாவில் விஜயகாந்த் குறித்து மனமுருகி பாடிய தனுஷ்... வீடியோ வைரல்..!
Published on

சென்னை,

தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.

இப்படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் இரண்டு பாகங்கள் 1940 மற்றும் 1990 களில் நடப்பது போன்றும் மூன்றாம் பாகம் தற்போது நடப்பது போன்றும் வெளியாக இருக்கிறது. இந்த படம் தனுஷின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக உருவாகியுள்ளது. அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது. அந்த வகையில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அண்மையில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ் 'ராசாவே உன்ன காணாத நெஞ்சு' பாடலை மனமுருகி பாடி அஞ்சலி செலுத்தினார். அந்த பாடலை அங்கு வந்திருந்த ரசிகர்களும் அவருடன் சேர்ந்து பாடி விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com