தேவிஸ்ரீ பிரசாத் இசையில் முதல் முறையாக பாடிய தனுஷ்

‘குபேரா’ படத்தின் முதல் பாடலை தேவிஸ்ரீ பிரசாத் இசையில் நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையில் முதல் முறையாக பாடிய தனுஷ்
Published on

'ராயன்' படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். 'குபேரா' படம் தனுஷின் 51-வது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதைத்தொடர்ந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கான 80 சதவீதம் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியுள்ளது.

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஒருபறம் நடைபெற்று வந்தாலும் மறுபுறம் இதன் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். ஏற்கனவே தனுஷ் நடித்த குட்டி, வேங்கை படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தாலும் முதன்முறையாக குபேரா படத்தில்தான் தனுஷை பாட வைத்துள்ளார் தேலிஸ்ரீ பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com