விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்

ஆனந்த் எல் ராய் இயக்கி வரும் 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தில் விமானப்படை அதிகாரியாக தனுஷ் நடிக்கிறார்.
விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்
Published on

மும்பை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், 'ராயன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'இட்லி கடை' படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ந் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 20-ந் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மெய்ன்' என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 'தேரே இஷ்க் மெய்ன்' படப்பிடிப்பு தளத்திலிருந்து தனுஷின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் தனுஷ் விமானப்படை அதிகாரி உடையில் இருக்கின்றார். இதன் மூலம் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தில் விமானப்படை அதிகாரியாக நடிப்பது உறுதியாகியிருக்கின்றது. இந்த படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com