காமெடி நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்

இளையராஜாவின் பயோபிக் படத்தை தொடர்ந்து காமெடி நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார்.
காமெடி நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்
Published on

சென்னை,

தமிழ் திரைப்பட துறையின் 'நகைச்சுவை மன்னன்' என அழைக்கப்பட்டவர் சந்திரபாபு. இவர் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல் பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடு கொண்ட அற்புதமான கலைஞனாகவும் விளங்கியவர். 1947-ம் ஆண்டு 'தன அமாராவதி' என்னும் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் சினிமாத்துறையில் முதன் முதலாக கால்பதித்தார். இவர் 'தென்னக சார்லி சாப்ளின்' என்றும் அழைக்கப்பட்டார்.

"புதையல், சகோதரி, நாடோடி மன்னன், குலேபகாவலி, நீதி, ராஜா, பாதகாணிக்கை, நாடோடி மன்னன், கவலை இல்லாத மனிதன், அடிமைப்பெண்" போன்றவை இவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும். குறுகிய காலத்திற்குள் பல திரைப்படங்களில் நடித்து, நகைச்சுவை நடிப்பில் மன்னனாக திகழ்ந்தார். 1940 காலகட்டங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு நிகராக புகழ்பெற்று விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான தனுஷ் நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தனுஷ், 'இட்லி கடை மற்றும் குபேரா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை நிறைவு செய்த பிறகு, இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com