“சிறை” பட இயக்குநருடன் இணையும் தனுஷ்?

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கர’ படம் ஏப்ரல் 30 வெளியாகிறது.
“சிறை” பட இயக்குநருடன் இணையும் தனுஷ்?
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் ‘தேரே இஸ்க் மெய்ன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ படம் ஏப்ரல் 30 வெளியாகிறது. இதனையடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘டி55’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்த படமான ‘டி56’, ‘லப்பர் பந்து’ தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த பட வரிசைகள் எல்லாம் அமையும் முன்பு இணைய இருந்த ஒரு கூட்டணி தனுஷ் - ஹெச் வினோத். இப்படத்தை தயாரிப்பாளர் லலித் தயாரிப்பதாக இருந்தது. ‘ஜனநாயகன்’ படத்திற்கு பிறகு ஹெச் வினோத் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் இதில் தாமதங்கள் ஏற்பட்டு இருக்கும் நிலையில், இப்போது இந்தக் கூட்டணியில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படம் உருவாக்க தாமதம் ஆவதால், தனுஷ் கால்ஷீட்டை விட்டுவிடாமல் இருக்க திட்டமிட்டுள்ள லலித், ஹெச் வினோத்துக்கு பதிலாக வேறு இயக்குநரை வைத்து படத்தை எடுக்க உள்ளாராம். அதன்படி லலித்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் ‘சிறை’. இப்படத்தை இயக்கிய சுரேஷ் ராஜகுமாரி தனுஷ் நடிப்பில் லலித் தயாரிக்கும் படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

வெற்றிமாறனுடன்‘வடசென்னை 2’, மாரி செல்வராஜூடன் படம், ஷங்கரின் ‘வேள்பாரி’ என தனுஷுக்கு அடுத்தடுத்து இருக்கும் லைன்-அப் பேச்சு வார்த்தை மத்தியில் இந்தப் படம் எப்போது உருவாகும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இப்போதைக்கு தனுஷ் - லலித் - சுரேஷ் ராஜகுமாரி கூட்டணி பேச்சுவார்த்தையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com