

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் 'இட்லி கடை'. "தேரே இஸ்க் மெய்ன்" ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தைக் கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான, பூஜை புகைப்படங்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கோபுரம் பிலிம்ஸ் படத்தை தயாரிப்பதில் இருந்து பட்ஜெட் காரணமாக பின்வாங்கியது. இதனால் தனுஷே தனது தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஸ்டுடியோஸ் மூலமாக படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்தார். விரைவில் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் 55’ திரைப்படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் ஆர் டேக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ‘தனுஷ் 55’ படத்தில் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சாய் அபயங்கர், ''கட்சி சேரா'', ''ஆச கூட'' போன்ற பாடல்கள் மூலம் புகழ் பெற்றார். ஷான் நிகாம் நடித்துள்ள ''பல்டி'' படத்தின் மூலம் சாய் மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அவருடைய இசையமைப்பில் முதல் படமாக ‘டியூட்’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘கருப்பு’, ‘மார்ஷல்’, ‘அட்லி இயக்கி வரும் படம்’, ‘பாலாஜி தரணீதரன் – விஜய் சேதுபதி படம்’, ‘சிம்பு – ‘பார்க்கிங்’ இயக்குநர் படம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் சாய் அபயங்கர்.