தனுஷின் 55வது படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

தனுஷின் 55 வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
தனுஷின் 55வது படத்தின் படப்பிடிப்பு துவக்கம்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் ‘இட்லி கடை’,‘தேரே இஸ்க் மெய்ன்’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, ‘போர்தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

நடிகர் தனுஷ், ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55 படத்தில் நடிக்க உள்ளார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆகே டேக்ஸ்டியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘தனுஷ் 55’ என்ற டைட்டில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீ லீலா, சாய் பல்லவி, மம்முட்டி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், ‘தனுஷ் 55’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. விழாவில் நடிகர் தனுஷ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com