என்னுடைய திரைப்பயணத்தில் தனுஷின் 56வது படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் - மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கும் தனுஷின் 56வது படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் தயாரிக்கிறது.
என்னுடைய திரைப்பயணத்தில் தனுஷின் 56வது படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் - மாரி செல்வராஜ்
Published on

சென்னை,

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படம் சரித்திர கதையில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. திரைப்படம் வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனது 56வது படத்தில் நடிக்கவுள்ளார் இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் தயாரிக்கிறது. படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொள்கிறார்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் படத்தை குறித்து சில சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார் அதில் அவர் "கர்ணன் திரைப்படத்தின் போது இப்படத்திற்கு ஒப்பந்தமானேன். இப்பொழுது தான் அதற்கான நேரம் வந்துள்ளது. பைசன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் படத்தை இயக்கவுள்ளேன், மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகும் திரைப்படம் இது, என்னுடைய திரைப்பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும்" என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com